Thursday, December 22, 2022

Good Friday

பெரிய வெள்ளிக்கிழமை

Good Friday

ஆரம்ப வசனம்

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5.8

 

சுருக்க ஜெபங்கள்

சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், தேவரீருடைய வீட்டாராகிய எங்களுக்காகக் காட்டிக்கொடுக்கப்படவும், அக்கிரமக்காரருடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலுவையில் மரணமடையவும மனதாரச சம்மதித்ததினிமித்தம், எங்களைக் கிருபையோடே கண்ணோக்கிப் பார்க்க வேண்டுமென்று, உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்

 

சர்வ வல்லமையுள்ள அநாதி தேவனே, திருச்சபையாகிய சரீரம் முழுவதையும் உம்முடைய ஆவியினாலே ஆண்டு பரிசுத்தமாக்கிக் கொண்டு வருகிறீர். அதன் அவயவங்களாகிய ஒவ்வொருவரும் தான் அழைக்கப்பட்டிருக்கிற நிலைமையிலும் பணிவிடையிலும் உண்மையாயும் பக்தியாயும் உம்மைச் சேவிக்கும்படி உம்முடைய பரிசுத்த சபையிலுள்ள எவ்வகையானவர்களுக்காகவும் நாங்கள் உமது சந்ததியில் செய்கிற விண்ணப்பங்களையும் ஜெபங்களையும், எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 1கொரிந்தியர் 11:26

SOCIAL RESPONSIBELITY DAY

 SOCIAL RESPONSIBELITY DAY

சமூகக் கடப்பாடு திருநாள்

சர்வ வல்லமையுள்ள பிதாவே, உமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் எங்களில் எளிய சகோதரர்களுக்கு எதைச் செய்கிறோமோ அதையே உமக்கும் செய்வதாக போதித்தீரே, அவர் எல்லோருக்கும் பணி விடை செய்ததுபோல நாங்களும் பிறருக்குப் பணி விடை செய்யத் தக்கதான ஆர்வத்தைக் தந்தருளும். இன்றும் என்றென்றும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டுகிறோம்.

Thanksgiving Service

 அறுப்பின் பண்டிகை Thanksgiving Service

 

ஆரம்ப வசனம்

பூமி தன் பலனைத் தரும். தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 67.6.

 

சுருக்க ஜெபம

சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே, உமது பிதாவின் தன்மை பொருந்திய நன்மையினாலும் கருத்தினாலும் பூமியின் பலன்களை அதனதன் காலத்தில் கிருபையாக அளித்ததற்காக உமக்கு முழுமனதோடு நன்றி செலுத்துகிறோம். அவற்றை உமது நாம மகிமைக்காகவும் எங்கள் நலத்திற்காகவும் பிறரின் தேவைகளைத் துடைப்பதற்காகவும் சரியாக உபயோகிக்கக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

 

நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரத்தையும், அவனுக்கு முகக் களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். சங்கீதம் 104.13,15

The Holy Innocents (28 December)

 குற்றமில்லாப் பாலகருடைய திருநாள் (டிசம்பர் 28)

The Holy Innocents (28 December)

ஆரம்ப வசனம்

நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். எரேமியா 31.13

 

சுருக்க ஜெபம்

பரம பிதாவே, தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருந்த போதிலும் ஏரோதுவின் கைகளில் பாலகர் துன்பம் அனுபவித்தனரே. நாங்கள் கொடூரமாய் நடக்காமலும் ஏனோதானோவென்று இருக்காமலும் பலமுள்ளவர்களன் கொடுமையில் துன்புறும் பலவீனரைத் தாங்கவும் எங்களுக்காக துன்புற்ற போதிலும் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றகிறவர்கள் இவர்களே. இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியான வருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 14.4

St. John the Evangelist (27 December)

சுவிசேஷகனாகிய பரிசுத்த யோவானின் திருநாள் (டிசம்பர் 27)

St. John the Evangelist (27 December)

ஆரம்ப வசனம்

அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்து இவைகளை எழுதினான். அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். பரி.யேவான் 21.24

 

சுருக்க ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே, உமது திருக்குமாரன் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறாரே. நாங்கள் எங்கள் மத்தியில் வந்துள்ள அந்த ஒளியில் நடக்கவும் கடைசியில் அவரை நித்திய ஜீவனுக்காக ஒளியாக அறிந்துகொள்ளவும் தக்கதாக, உமது அப்போஸ்தலனும் சுவிசேஷகனுமாகிய பரிசுத்த யோவான் உபதேசத்ததால் உமது திருச்சபையை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்த வார்த்தை மாமிசமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். பரி.யோவான் 1.14, 16

St. Stephen the first Martyr (26 December)

முதல் இரத்தச் சாட்சியாகிய பரிசுத்த ஸ்தேவானுடைய திருநாள் (டிசம்பர் 26)

St. Stephen the first Martyr (26 December)

ஆரம்ப வசனம்

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். அப்போஸ்தலர் 6.8

 

சுருக்க ஜெபம்

பரம பிதாவே, சிலுவையில் அறையுண்ட இயேசுவை நாங்களும் நோக்கவும், எங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கவும் தக்கதாக, சத்தியத்திற்காக நாங்கள் படும் துன்பங்களில் உமது முதல் இரத்தச் சாட்சியான பரிசுத்த ஸ்தேவானின் முன்மாதிரியைப் பின்பற்ற எங்களுக்குக் கிருபை தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதைக் காண்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்றான். அப்போஸ்தலர் 7.56, 59

St. Andrew the Apostle (30 November)

அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயாவின் திருநாள் (நவம்பர் 30)

St. Andrew the Apostle (30 November)

ஆரம்ப வசனம்

இயேசு, என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். பரி.மத்«யு 4.19

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது அப்போஸ்தலனாகிய பரிசுத்த அந்திரேயா உமது குமாரனின் அழைப்புக்கு உடனடியாக கீழ்ப்படியவும் தனது சகோதரனைத் தன்னோடு கொண்டுவரவும் அவருக்குக் கிருபை அருளினீரே. உமது பரிசுத்த வசனத்தால் அழைக்கப்படும் நாங்கள் தாமதமின்றி உம்மைப் பின் தொடரவும் உமது இராஜ்ஜியத்தின் நற்செய்தியை எடுத்துக்கூறவும், உமது கிருபையைத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

அந்திரேயா தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு, மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். பரி.யோவன் 1.41, 42